தேவையானவை
1 /2 கிலோ சேனை கிழங்கு (கருணை கிழங்கு)
1 வெங்காயம்
1 தக்காளி
1 டீஸ்பூன் மிளகாய் பவுடர்
2 டீஸ்பூன் தனியா பவுடர்
1/2 டீஸ்பூன் மஞ்சள் பவுடர்
1/2 கப் தேங்காய்
6 பச்சை மிளகாய்
1/2 கப் புளி கரைசல்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய் தாளிக்க
செய்முறை
- தேங்காயுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து, அதனுடன் மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
- அதில் சேனை கிழங்கு மற்றும் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். இடை இடையே கிளறி விடவும்.
- கிழங்கு 90 சதவிகிதம் வெந்தவுடன் அரைத்த விழுது மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து பச்சை வாசனை போன பிறகு இறக்கவும்.