chenai kizhangu Koottu

தேவையானவை

1 /2  கிலோ சேனை கிழங்கு (கருணை கிழங்கு)
1 வெங்காயம்
1 தக்காளி
1 டீஸ்பூன் மிளகாய் பவுடர்
2  டீஸ்பூன் தனியா பவுடர்
1/2 டீஸ்பூன் மஞ்சள் பவுடர்
1/2  கப் தேங்காய்
6  பச்சை மிளகாய்
1/2  கப் புளி கரைசல்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய் தாளிக்க

செய்முறை

  • தேங்காயுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து, அதனுடன் மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  • அதில் சேனை கிழங்கு மற்றும் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். இடை இடையே கிளறி விடவும்.
  • கிழங்கு 90 சதவிகிதம் வெந்தவுடன் அரைத்த விழுது மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து பச்சை வாசனை போன பிறகு இறக்கவும்.


Basandhi

தேவையானவை

2 லிட்டர் பால்
1 கப் சர்க்கரை
பிஸ்தா, பாதாம், முந்திரி தலா 2  டீஸ்பூன்
1  டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்

செய்முறை

  • நல்ல கனமான பாத்திரத்தில் பாலை காய்க்கவும். பால் கொதித்தவுடன் அடுப்பை குறைத்து வைக்கவும்.
  • பால் கொதிக்கும் போது படியும் பாலாடையை சேகரித்து தனியாக வைக்கவும்.
  • பால் நன்றாக சுண்டியதும் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
  • சர்க்கரை நன்றாக சேர்ந்ததும், சேகரித்து வைத்த பாலாடையை சேர்த்து கிளறவும்.
  • சிறிது நேரம் கொதித்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கி வைத்து பிஸ்தா, பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் பவுடரை சேர்க்கவும்.  நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் வைத்துவிடவும்.  ஜில்லென்று பரிமாறவும்.


Milk Chocolate

தேவையானவை

2 கப் பால் பவுடர்
2 கப் சர்க்கரை
2 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
50 கிராம் வெண்ணெய்
1/2 கப் தண்ணீர்

செய்முறை

  •  பால் பவுடரையும் கோகோ பவுடரையும் சேர்த்து சலிக்கவும்.
  • சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு காய்க்கவும். கெட்டியான கம்பி பதம் வந்தவுடன் வெண்ணெய் சேர்க்கவும்.
  • அதன் பிறகு, சலித்து வைத்த பவுடரை சேர்த்து நன்றாக கிளறவும். சப்பாத்தி மாவு பதம் வந்தவுடன், நெய் தடவிய தட்டில் கொட்டி விடவும்.
  • சூடாக இருக்கும் போதே துண்டு போடவும்.

You Might Also Like